பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு எதிராக விளம்பர பிரச்சாரம்
பிரித்தானியாவில் சட்ட விரோதமாக நுழையும் அல்பேனியர்களுக்கு எதிராக, அரசு விளம்பர பிரச்சாரம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
விளம்பர பிரச்சாரம்
பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் அல்பேனிய நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கு எதிராக, நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்படவுள்ளதாக அரசு கூறியுள்ளது.
@pa
அதில் அல்பேனியன் மற்றும் ஆங்கில மொழியில் ‘சட்டவிரோதமாக நுழைந்தால் நீங்கள் வெளியேற்றப்படுவீர்’ என்ற வாசகத்தோடு விளம்பர போஸ்டர்கள் ஒட்ட திட்டமிட்டுள்ளனர்.
இந்த விளம்பரத்திற்காக அரசு எவ்வளவு பணம் செலவு செய்யப் போகிறது, என்பதனை பற்றிய கூடுதல் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
@skynews
அதே சமயம் அல்பேனியாவில் படகுகள் மூலம், சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் அல்பேனியர்கள், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
கடந்த ஆண்டு இதேபோன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், எல்லைகளில் சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அரசின் பிரச்சாரங்கள் அவர்களை கடுமையாக சாடியுள்ளனர்.
@@skynews
மேலும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமுக வலைத்தளங்களில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அல்பேனிய மொழியில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டை விட, இந்த ஆண்டில் 6000க்கும் அதிகமானோர், பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@stevepin
மேலும் உள்துறை அலுவலகத்தின் கூற்றுப்படி, அல்பேனியா ஒரு பாதுகாப்பான மற்றும் வளமான நாடு மற்றும் பல நாட்டவர்கள், பிரித்தானியாவிற்குள் நுழைய பல நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள் எனவும், அவர்கள் வரும்போது போலியான புகலிட கோரிக்கைகளை' முன்வைக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.