நாடு முழுவதும் பரவும் காய்ச்சல்... மாஸ்க் அணிய பிரித்தானியர்களுக்கு ஆலோசனை
பிரித்தானியா முழுவதும் ப்ளூ காய்ச்சல் முதலான தொற்றுகள் பரவிவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்க, மாஸ்க் அணிந்துகொள்ளுமாறு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறிவருகிறார்கள்.
நாடு முழுவதும் பரவும் காய்ச்சல்...
பிரித்தானியாவில் குளிர்கால வைரஸ்கள் பல பரவிவருகின்றன. குறிப்பாக, இன்ஃப்ளூயென்சா என்னும் ப்ளூ காய்ச்சல் அதிக அளவில் பரவிவருகிறது.

ஆகவே, தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், மாஸ்க் அணிவது முதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவில், மரபணு மாற்ற ப்ளூ வைரஸ் ஒன்று வேகமாக பரவிவரும் விடயம், மருத்துவர்களை கவலை அடையச் செய்துள்ளது.
ஆகவேதான், ப்ளூ முதலான தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உதவுவதற்காக மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி மக்களை வலியுறுத்தியுள்ளது.
🤧 Feel yourself coming down with something? Help stop common infections like #flu from spreading with this checklist pic.twitter.com/mKijFHbJCa
— UK Health Security Agency (@UKHSA) December 2, 2025
அடிக்கடி கைகளைக் கழுவுதல், வீட்டுக்கு மற்றவர்கள் வரும் நேரத்தில், அதாவது, ஆட்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைத்தல், தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டை அல்லது டிஸ்யூ காகிதத்தால் மூக்கு மற்றும் வாயை மூடுதல் முதலான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
அத்துடன், உடல் நலம் பாதிக்கப்பட்டால், முடிந்தவரை வீட்டிலிருக்குமாறும், வெளியே செல்லவேண்டிவந்தால் மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும் பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |