ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பிரித்தானியர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் நாட்டின் சுகாதார அமைப்பு அழுத்தத்தில் இருக்கும், எனவே பொதுமக்கள் தங்களது பொது அறிவை பயன்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டீவ் பார்க்லே புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளார்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பிரித்தானியா மற்றும் வேல்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து புதன்கிழமை வேலைநிறுத்தத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தமானது, செவிலியர்கள் வெளிநடப்பு செய்த ஒரு நாளுக்கு பிறகு வந்துள்ளது.
REUTERS
கடந்த 2010 ஆண்டு முதல் சுகாதார துறையில் ஊதிய அடிப்படையானது 17 சதவிகிதம் குறைந்து இருப்பதாகவும், அதே நேரத்தில் பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ்களின் தேவை 77 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகவும் GMB யூனியன் வேலை நிறுத்தம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சர்ச்சையை எந்த நேரத்திலும் அரசாங்கத்தால் தீர்த்து வைக்க முடியும் என்று தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் ரேச்சல் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.
REUTERS
மக்கள் பொது அறிவை பயன்படுத்துங்கள்
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தமானது மிகவும் வருந்தத்தக்கது என்றும், இதனால் பிரித்தானிய சாலையில் குறைவான ஆம்புலன்ஸ்களையே பார்க்க முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புதன்கிழமை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதால் சுகாதார அமைப்பு அழுத்தத்தில் இருக்கும் எனவே மக்கள் தங்கள் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய சுகாதார அமைச்சர் ஸ்டீவ் பார்க்லே அறிவுறுத்தியுள்ளார்.
REUTERS
மேலும் தேசிய சுகாதார சேவை (NHS) உயிருக்கு ஆபத்தான தேவைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருங்கள், அதற்கேற்ப உங்கள் செயல்பாட்டை திட்டமிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.