பிரித்தானியாவின் வாழ்க்கை செலவு நெருக்கடி: புதிய நிதி திட்டத்தை அறிவிக்க தயாராகும் போரிஸ் அரசு
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பாக சுமார் 10 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நிதி திட்டத்தை ரிஷி சுனக் வியாழன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கமானது உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில், பிரித்தானியாவின் நடுத்தர மற்றும் ஏழைப் பொதுமக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.
இந்த பொருளாதார நெருக்கடியை குறைக்க பிரித்தானிய அரசு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களும் எதிர்கட்சிகளும் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
PHOTO: PA
இத்துடன் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்க்கு விதிகளை மீறி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான சூ கிரே-வின் அறிக்கையும் ஓரிரு நாள்களுக்குள் வெளிவர உள்ளது.
இந்தநிலையில், பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கான சுமார் 10 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நிதி திட்டத்தை ரிஷி சுனக் வியாழன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் பிரித்தானிய Chancellor ரிஷி சுனக்-கின் இந்த அறிவிப்பானது சூ கிரே-வின் பார்டிகேட் அறிக்கை வெளியான அடுத்த நாள் வெளியாகலாம் எனவும் பிரித்தானியாவின் வெள்ளை மாளிகை அரசு வட்டாரங்கள் எதிர்பார்கின்றன.
PHOTO: AFP
இதனைத் தொடர்ந்து வெளிவந்த தகவலில், சுமார் 10 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நிதி திட்டத்தில் கையெழுத்திட பிரதமர் போரிஸ் ஜான்சனை Chancellor ரிஷி சுனக் சந்தித்தாகவும் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் போர்...அவசர கால நிலையை அறிவித்தது ஹங்கேரி!
அத்துடன் இந்த மிகப்பெரிய நிதி திட்டத்தில், பிரித்தானிய குடும்பங்களில் எரிப்பொருள் கட்டணத் தொகையால் சிரமப்படுபவர்களுக்கு நிதி உதவி மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் மீதான திடீர் வரி ஆகியவை அடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.