வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கை
பிரித்தானிய அரசு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக சிறப்பு தூதர் ஒருவரை நியமித்துள்ளது.
வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்காக...
32 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் Alistair Burt.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான மாகாண அமைச்சராகவும் பதவி வகித்தவரான Alistairதான் வெளிநாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதாவது, பிரித்தானிய ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான Nazanin Zaghari-Ratcliffe என்னும் பெண் ஈரானில் 6 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தது குறித்து அறிந்திருக்கலாம்.

அதேபோல, இந்தியாவில் பிரித்தானியக் குடிமகனான ஜக்தார் சிங் ஜோஹல் என்பவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அத்தகையோரை மீட்டு பிரித்தானியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பிலான சிக்கலான தூதரக வழக்குகளைக் கையாள்வதற்காகவே Alistairக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |