போருக்கு தயாராகும் பிரித்தானியா., Kamikaze ட்ரோன்களை சோதனை செய்யும் இராணுவம்
உக்ரைன் போர் காரணமாக ட்ரோன் போர் முறைகள் வேகமாக வளர்ந்துள்ள நிலையில், பிரித்தானிய இராணுவம் எதிரி ட்ரோன்களை வேட்டையாட புதிய Kamikaze ட்ரோன் முறைகளை பரிசோதித்துவருகிறது.
ஜேர்மனியில் உள்ள Alpine Eagle என்ற நிறுவனம் உருவாக்கிய Sentinel என்ற புதிய ட்ரோன் முறை தற்போது Project Vanaheim எனும் பைலட் திட்டத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதில், ஒரு பாரிய 'Mothership' ட்ரோன் விமானம் மேலிருந்து கண்காணித்து, எதிரி ட்ரோனை கண்டதும் அதனை தாக்குவதற்காக சிறிய தற்கொலை ட்ரோன்களை விடுகிறது.
இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக, ஒரே ஒரு பைலட்டால் பல ட்ரோன்களை இயக்க முடியும், எனவே இது செலவுச்சுமையைக் குறைக்கும் திறமையான பாதுகாப்பு சாதனமாகும்.
உலகின் பல நாட்டு இராணுவங்கள் தற்போது ட்ரோன் எதிர்ப்பு, சுவாரஸ்யமான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பிரித்தானியா 3,000 தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் 1,000 கண்காணிப்பு ட்ரோன்கள் ஆகியவற்றை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
Alpine Eagle, தனது ட்ரோன் தொழில்நுட்பத்தை மேலும் விரிவுபடுத்த பிரித்தானியாவில் தனது கிளையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
9 மில்லியன் பவுண்டு முதலீடு செய்துள்ள இந்நிறுவனம், முன்னாள் Royal Navy பொறியாளரைக் கூட்டத்தில் இணைத்துள்ளது.
இத்தகைய முயற்சிகள் எதிர்கால போர்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |