பிரித்தானியாவில் ரஷ்யாவிற்காக உளவு பார்த்ததாக 3 பேர் கைது
பிரித்தானியாவில் ரஷ்யாவிற்காக உளவு பார்த்த சந்தேகத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவியதாகக் கூறப்படும் மூவரை கைது செய்துள்ளதாக பிரித்தானியாவின் மெட்ரோபொலிட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
44, 45 மற்றும் 48 வயதுடைய இந்த மூவர், லண்டனின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள இடங்களில், 2023 தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யா பிரித்தானியாவில், உளவு பார்த்தல், நாசவேலை மற்றும் சைபர் தாக்குதல்களை அதிகமாக நடத்திவருவதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறும் நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

லண்டன் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் டோமினிக் மர்பி, "வெளிநாட்டு உளவுத்துறைகள் பலர் மூலம் 'proxy' எனப்படும் இடைநிலையாளர்களை சேர்த்து செயல்படுகின்றன. இந்த கைது, அந்த முயற்சிகளை தடுக்க எங்களால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு லண்டனில் உக்ரைன் தொடர்புடைய வணிக நிறுவனங்களில் நடந்த தீவைத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.
இந்த தாக்குதல் ரஷ்யாவின் வாக்னர் குழுவால் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய நபராக இருந்த டிலன் எர்ல், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முதல் நபராக உள்ளார்.
MI5 பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கென் மெக்காலம், “ரஷ்யா குழப்பம் மற்றும் அழிவை ஏற்படுத்த உறுதியாக செயல்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
ஆனால், ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, “பிரித்தானியாவில் எந்த மோசமான சம்பவம் நடந்தாலும் ரஷ்யாவை குற்றம் சாட்டுவது வழக்கமாகிவிட்டது” என பதிலளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |