பிரித்தானியாவில் சட்டவிரோத உணவு விநியோக நபர்கள் கொத்தாக கைது
புலம்பெயர் மக்கள் சட்டவிரோதமாக உணவு விநியோக வேலைகளில் ஈடுபட்டுள்ளதை தடுக்க நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து பேர்களில் ஒருவர் கைதாகியுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம்
ஜூலை 20 முதல் 27 வரை குடிவரவு அமலாக்க அதிகாரிகள் 1,780 நபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர், அதில் 280 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 53 பேர்களின் புகலிடக் கோரிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் உள்விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத புலம்பெயர் மக்களை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, இதில் தொழிலாளர்களின் குடியேற்ற நிலையை நிறுவனங்கள் சரிபார்க்கின்றனவா என்ற சோதனையும் அடங்கும்.
மேலும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரால் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்க்க முடியும் என்பதை வாக்காளர்களுக்குக் காட்ட வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.
அபராத அறிவிப்புகள்
கைது நடவடிக்கைகளுடன், சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக அபராதம் விதிக்கப்படக்கூடிய கார் கழுவும் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் உட்பட 51 வணிகங்களுக்கு சிவில் அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
58 மின்-பைக்குகள் உட்பட 71 வாகனங்களை பொலிசார் பறிமுதல் செய்தனர், மேலும் 8,000 பவுண்டுகள் ரொக்கம் மற்றும் 460,000 பவுண்டுகள் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஜூலை வரையிலான 12 மாதங்களில், பிரித்தானியாவில் தங்குவதற்கு உரிமை இல்லாத 35,052 பேரை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |