லண்டனில் நடைபெற இருக்கும் கலை கண்காட்சி: நிர்வாண மாடல்களுக்கு நடுவே அமைக்கப்படும் பாதை
பிரித்தானியாவில் நடக்க இருக்கும் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் கண்காட்சியை பார்வையிட வரும் பார்வையாளர்கள் நிர்வாண மாடல்களுக்கு இடையே தங்களை திணித்துக் கொண்டு தான் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் கண்காட்சி
பிரித்தானியாவின் லண்டனில் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் கண்காட்சியில் மெரினா அப்ராமோவிக்-கின் கண்காட்சி 2023 செப்டம்பர் 23ம் திகதி முதல் 2024 ஜனவரி 1ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள விரும்பும் பார்வையாளர்கள் நிர்வாணமாக நிற்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இடைவெளி வழியாக தங்களின் உடல்களை திணித்து கொண்டு வெளியேறி தான் மெரினா அப்ராமோவிக்-கின் (Marina Abramovic) கண்காட்சிக்குள் செல்ல முடியும் என தகவல் டெலிகிராப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் கண்காட்சியின் தலைவர் ஆண்ட்ரியா டார்சியா, இம்போண்டராபிலியா(Imponderabilia) என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை பாலினம், பாலியல், ஆசை மற்றும் நிர்வாணத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே மோதலை ஏற்படுத்துகிறது.
மேலும் இந்த கண்காட்சியில் கலைஞர்களின் 50 ஆண்டுகால வாழ்க்கை சிற்பம், வீடியோக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கண்காட்சியில் நிர்வாண பெண் ஒருவர் சிலுவை அடிக்கப்பட்டது போன்ற கோணத்தில் மிதிவண்டியில் அமர்ந்தபடி வெளிச்சத்தில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் டெலிகிராப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாண மாடல்கள் வழியாக நுழைய விரும்பாத நபர்களுக்கு என்று தனியான சிறப்பு வழி ஒன்றும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |