5 வருட போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் இடியாக வந்த செய்தி! ஒலிம்பிக்கில் இருந்து பிரபல பிரித்தானியா தடகள வீராங்கனை விலகல்
கொரோனா உறுதியானதை அடுத்து பிரபல பிரித்தானியா துப்பாக்கிச் சூடு வீராங்கனை அம்பர் ஹில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் திகதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்நிலையில், டோக்கியோ புறப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அம்பர் ஹிலுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
தொற்று உறுதியானதை அடுத்து 23 வயதான ஹில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என அம்பர் ஹில் கவலை தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்கள் கடும் பயிற்சி செய்தேன், இந்நிலையில் நேற்றிரவு எனக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதனால் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலக வேண்டியிருந்தது.
எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும், அரசாங்க வழிகாட்டுதலின் படி நான் இப்போது தனனிமைப்படுத்துவேன் என ஹில் கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சூடு போட்டியில் அம்பர் முக்கிய போட்டியளாராக கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பருக்கு தொற்று உறுதியானதை பிரிட்டிஷ் ஒலிம்பிக் அசோசியேஷன் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் அம்பருக்கு பதிலாக யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளது.