பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக...பிரித்தானியாவின் அட்டர்னி ஜெனரல் வழங்கிய புதிய ஒப்புதல்
வடக்கு அயர்லாந்து தொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை சட்டபூர்வமாக மீறலாம் என பிரித்தானியா மற்றும் வேல்ஸின் அட்டர்னி ஜெனரல், சுயெல்லா பிராவர்மேன் தெரிவித்துள்ளார்.
வடக்கு அயர்லாந்துடனான சுதந்திரமான மற்றும் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை பிரித்தானியா அகற்றுவது தொடர்பாக முக்கிய முடிவுகளை பிரித்தானிய அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
அந்தவகையில் தற்போது வடக்கு அயர்லாந்து தொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை(Brexit deal) சட்டபூர்வமாக மீறலாம் என பிரித்தானியாவின் அட்டர்னி ஜெனரல், சுயெல்லா பிராவர்மேன் தெரிவித்ததை தொடர்ந்து பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ்(Liz Truss) ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தயுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த புதன்கிழமை பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான முரண்பாடுகளை களைவது குறித்த ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த அறிவுறுத்தல்களை பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் மறுத்து இருந்தார்.
மேலும் பிரஸ்ஸல்ஸின் சட்ட நடவடிக்கையைத் தூண்டும் என்று அயர்லாந்து கூறிய எச்சரிக்கைகளுக்கு நேரடி நடவடிக்கை எடுப்பதில் பிரித்தானிய வெட்கப்படாது என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்ததை பிரித்தானிய அரசானது மீறுவது நினைப்பது, வெறுப்புட்டும் மற்றும் எதிர்விளைவுகள் நிறைந்தது என அமெரிக்காவின் மூத்த உறுப்பினர் பிரெண்டன் பாயில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வடக்கு அயர்லாந்து தொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த அட்டர்னி ஜெனரல், சுயெல்லா பிராவர்மேனின் ஒப்புதல் வெளிவந்து இருப்பது குறிப்பிடதக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் வரிச்சலுகை அறிவிப்புகள் எப்போது வெளியாகும்..?
பிரித்தானியாவின் இந்த திடிர் அதிரடியான முடிவானது வடக்கு அயர்லாந்தில் அயர்லாந்து சார்பு கட்சி வெற்றிபெற்றதை தொடர்ந்து வேகமெடுத்து இருப்பது குறிப்பிடதக்கது.