பிரித்தானியாவில் வரிச்சலுகை அறிவிப்புகள் எப்போது வெளியாகும்..?
பிரித்தானியாவில் ஜுலை இறுதியில் கோடை விடுமுறைக்கு முன்னதாக வரிச் சலுகை தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கிட்டதட்ட பல ஆண்டுகளுக்கு பிறகு வாழ்க்கை செலவு பிரச்சனைகள், எரிவாயு தட்டுபாடு மற்றும் பணவீக்கம் ஆகிய முக்கிய பிரச்சனைகள் ஒரே நேரத்தில் அதிகரித்து வருகின்றன.
இந்த வாழ்க்கை செலவு பிரச்சனைகள் மற்றும் பணவீக்கத்தால் கிட்டதட்ட மில்லியன் கணக்கான மக்கள் குறைவான உணவையோ அல்லது சில நேரங்களில் உணவு உட்கொள்வதையே தவிர்த்து வருவதாக அடுத்தடுத்து வெளியான ஆய்வு அறிக்கைகள் தெரிவித்தன.
மேலும் நாட்டின் பணவீக்கமானது கடந்த எட்டு வாரங்களில் எதிர்பார்த்தை விட அதிகரித்துள்ளாதால் பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது.
இந்தநிலையில் வரும் ஜுலை மாத இறுதியில் கோடை விடுமுறைக்கு முன்னதாக வரி குறைப்பு சலுகைகள் குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடிர் முடிவானது, பிரித்தானிய வங்கியின் கடுமையான பொருளாதார கணிப்புகள் மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்ததை தொடர்ந்து அமைச்சர்கள் தங்களது முடிவுகளை மறுபரிசீலனை செய்து வருவதாக தெரிவந்துள்ளது.
மேலும் வரவிருக்கும் புதிய அறிவிப்பில், எரிவாயு செலவு தொடர்பான சலுகைகள் இருக்கும் எனவும், வரிச் சலுகைகள் தொடர்பான எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் அதுத் தொடர்பான முக்கிய முடிவுகள் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கையின் புதிய பிரதமரை இன்று அறிவிக்கிறார் அதிபர் கோட்டாபய! கசிந்த முக்கிய தகவல்
இதையடுத்து, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் புதிய சலுகை அறிவிப்புகள் நாட்டின் பொருளாதார பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என சில வெள்ளைமாளிகை உறுப்பினர்கள் அஞ்சுவதாகவும்தகவல் வெளியாகியுள்ளது