பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள்
பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், 2025-ஆம் ஆண்டுக்கான இலையுதிர்கால பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரி உயர்வுகள், நலத்திட்ட மாற்றங்கள் மற்றும் முதலீட்டு ஊக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
முக்கிய அறிவிப்புகள்:
Startup நிறுவனங்களுக்கு ஊக்கங்கள்:
Venture Capital மற்றும் Enterprise Investment Trust திட்டங்களின் வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 2026 முதல் முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 20 மில்லியன் பவுண்டு வரை முதலீடு செய்யலாம். EMI திட்டத்தில், ஊழியர்களுக்கு வழங்கப்படும் பங்குச் சலுகை 250 ஊழியர்களிலிருந்து 500 ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Mansion Tax:
2 மில்லியன் பவுண்டு மதிப்பை மீறும் வீடுகளுக்கு 2,500 பவுண்டு, 5 மில்லியன் பவுண்டு மதிப்பை மீறும் வீடுகளுக்கு 7,500 பவுண்டு கூடுதல் Council Tax வசூலிக்கப்படும். இதன் மூலம் 400 மில்லியன் பவுண்டு வருவாய் பெறப்படும்.
Pension Contributions:
2029 முதல், Salary Sacrifice Pension-க்கு 2,000 பவுண்டு வரம்பு விதிக்கப்படும்.
Income Tax:
வருமான வரி வரம்புகள் 2031 வரை உறையவைக்கப்படும். இதனால் “stealth tax” எனப்படும் மறைமுக வரி அதிகரிக்கும்.
Welfare:
Universal Credit--ல் உள்ள இரண்டு குழந்தை வரம்பு நீக்கப்படும். இதனால் 5.6 லட்சம் குடும்பங்களுக்கு சராசரியாக 5,310 பவுண்டு கூடுதல் நன்மை கிடைக்கும்.
பட்ஜெட்டின் தாக்கம்:
- வங்கிகள் மற்றும் Wealth Management நிறுவனங்கள் பங்குகள் உயர்ந்தன.
- வீடமைப்பு நிறுவனங்கள் பங்குகள் வீழ்ச்சி கண்டன.
- Morningstar, Invesco போன்ற முதலீட்டு நிறுவனங்கள், பிரித்தானிய பத்திரங்கள் (gilts) மீது நம்பிக்கை தெரிவித்தன.
எதிர்க்கட்சித் தலைவர் கெமி பாடெனோக், இந்த பட்ஜெட்டை “smorgasbord of misery” என விமர்சித்து, ரீவ்ஸ் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Autumn Budget 2025 highlights, Rachel Reeves tax hike announcements, UK mansion tax surcharge 2028, Universal Credit two-child limit scrapped, UK income tax thresholds frozen till 2031, Startup incentives EMI scheme expansion, UK venture capital trust reforms 2026, UK pension salary sacrifice cap 2029, Opposition Kemi Badenoch budget reaction, UK gilts and equity market response 2025