பிரித்தானியாவில் சில இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை
UK Bans Meta Smart Glasses: பிரித்தானியாவில் சில பொது இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை
பிரித்தானியாவின் பல்வேறு உயர்தர உணவகங்கள், பிரபல பப்கள் மற்றும் முக்கிய திரையரங்குகள், Meta நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடிகளை தடை செய்துள்ளன.
காரணம், இந்த கண்ணாடிகளில் உள்ள கமெரா (Camera) மற்றும் மைக் (Microphone) மூலம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யும் அபாயம் உள்ளது.

இந்த AI தொழில்நுட்ப கண்ணாடிகள் சாதாரண கண்ணாடிகளைப் போல தோன்றினாலும், அவற்றில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது.
பிரபலங்கள், குறிப்பாக கைலி ஜென்னர் (Kylie Jenner) போன்றவர்கள் இதை விளம்பரப்படுத்தியதால், இளம் தலைமுறையில் அதிக வரவேற்பு பெற்றது.
ஆனால், லண்டனின் பிரபல உணவக உரிமையாளர் ஜெரமி கிங், “விருந்தினர்களின் தனியுரிமையை கண்ணாடி மூலம் மீற அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Soho House தனது “படம்பிடிக்கக் கூடாது” என்ற கடுமையான விதியை ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
Wetherspoons பப்பின் தலைமை நிர்வாகி டிம் மார்டின், “வாடிக்கையாளர்களை அனுமதி இல்லாமல் படம் பிடிப்பது எங்கள் விதிமுறைக்கு எதிரானது. கண்ணாடிகள் கமெரா வசதியால் பொதுவான தனியுரிமையை மீறுகின்றன” என்று கூறியுள்ளார்.
மேலும், ATG Theatres (லண்டன், எடின்பர்க், பிரிஸ்டல்), நேரடி நிகழ்ச்சிகளின் போது ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்திருந்தால், பார்வையாளர்கள் அவற்றை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், தனியுரிமை பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |