பிரித்தானியாவில் 21 வயது அழகி துயர மரணம்! அவரது கனவை விவரித்த குடும்பம்
பிரித்தானியாவில் பனிக்கால வானிலையில் ஏற்பட்ட விபத்தில், 21 வயது அழகி உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பட்டம் வென்ற அழகி
2022ஆம் ஆண்டு Miss Faversham பட்டம் வென்ற அழகி எலிஷா ஸ்கின்னர். இவர் ஹை வைகாம்ப்பில் உள்ள பக்கிங்ஹாம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
@Faversham/Cover Images
இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் சம்பந்தப்பட்ட எதிர்பாராத ஒரு விபத்தில் எலிஷா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கடுமையான பனிக்கால வானிலை நிலவியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக, ஆக்ஸ்போர்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட எலிஷா தைரியத்துடன் போராடியுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த 8ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
ஒரு சமூக சேவகராக வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்ததாக எலிஷாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.
@Clare and Nigel Skinner/Cover Images
கற்பனை செய்ய முடியாத
மேலும், எலிஷாவின் பெற்றோர் நிகல் மற்றும் கிளேர் கூறுகையில், "எங்கள் விலைமதிப்பற்ற மகளின் திடீர் இழப்பால் நாங்கள் முற்றிலும் மனமுடைந்து போயுள்ளோம். இந்த வார்த்தைகளை எழுதுவது கற்பனை செய்ய முடியாததாக உணர்கிறது. ஆனால் அவர் உண்மையிலேயே யார் என்பதை உலகம் அறிய விரும்புகிறோம். மற்றவர்களை எப்போதும் தனக்கு மேலாக வைக்கும் ஒரு கனவான, தன்னலமற்ற, ஆர்வமுள்ள இளம் பெண் அவள்" என்றனர்.
எலிஷாவிற்கு சமூக ஊடகங்களிலும் அஞ்சலிகள் குவிந்துள்ளன. அவரது நண்பர்களும் எலிஷா குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு திறமையான குதிரை வீராங்கனையாகவும் இருந்த எலிஷா, பல ஆண்டுகளாக பல போட்டிகளில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Clare and Nigel Skinner/Cover Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |