முதலீட்டில் ஜேர்மனியை முந்தி முதலிடம் பிடித்த பிரித்தானியா
பிரித்தானியா, ஜேர்மனியை முந்தி ஐரோப்பாவின் மிக பிரபலமான முதலீட்டு நாடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியா (Brexit Britain), முதலீடுகளை ஈர்ப்பதில் ஜேர்மனியை முந்தி ஐரோப்பாவில் முதல் இடம் பிடித்துள்ளது.
PwC நடத்திய சர்வதேச ஆய்வின் படி, பிரித்தானியா உலகளவில் முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான நாடாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான நாடாக முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் முப்படை தாக்குதலுக்கு பின்னர் ஜேர்மனி எரிசக்தி நெருக்கடியில் சிக்கியது. இதனால் ஜேர்மனியின் முதலீட்டில் வீழ்ச்சி ஏற்பட்டது.
மேலும், டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்த அச்சங்களால் சீனாவில் முதலீடுகள் முடங்கியுள்ளன.
பிரித்தானியாவின் உள்ளூர் பொருளாதார நிலைமைகள்
PwC நடத்திய ஆய்வில், 2024-ல் 39% இருந்த நிறுவன தலைவர்களின் நம்பிக்கை, 2025ல் 61%-க்கு உயர்ந்துள்ளது.
குறிப்பாக, artificial intelligence போன்ற துறைகளில் பிரித்தானியா முன்னேறும் என நம்பிக்கை அதிகமாக உள்ளது.
ஆனால், இந்த செல்வாக்கை குறைக்கும் வகையில் பிரித்தானிய நிதி அமைச்சர் ரேசல் ரீவ்ஸ் (Rachel Reeves) 40 பில்லியன் பவுண்டுகள் வரிகளை உயர்த்தியதால் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 25 பில்லியன் பவுண்டுகள் employers' National Insurance கட்டண உயர்வு பல நிறுவனங்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |