பிரித்தானியாவின் கடைசி நிலக்கரி அனல் மின் நிலையம் மூடல்! முடிவுக்கு வந்த 142 ஆண்டு வரலாறு
பிரித்தானியாவில் கடைசி நிலக்கரி அனல் மின் நிலையம் திங்கட்கிழமை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட கடைசி அனல் மின் நிலையம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறும் நோக்கத்தின் ஒருப்பகுதியாக பிரித்தானியாவில் செயல்பட்டு வந்த கடைசி நிலக்கரி அனல் மின் நிலையமும் திங்கட்கிழமை மூடப்பட்டுள்ளது.
நாட்டிங்ஹாம்ஷையர்(Nottinghamshire) பகுதியில் யூனிப்பருக்குச்(Uniper) சொந்தமான Ratcliffe-on-Soar என்ற இந்த அனல் மின் நிலையம் மூடப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் மின்சார தேவைகளுக்காக நிலக்கரியை பயன்படுத்தும் 142 வரலாற்று முடிவு வந்துள்ளது.
There is at least ONE area where the UK is world-beating: the cost of our power.
— Ed Conway (@EdConwaySky) September 27, 2024
Acc to new figs, UK has highest industrial power prices in the developed world?
A key part of the explanation for why we deindustrialised faster than anyone (another thing we're world-beating at) pic.twitter.com/ZJJnkzvhHi
அனல் மின் நிலையத்தின் டர்போ ஜெனரேட்டர் கிரிட் அமைப்பு திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது.
முதல் நாடு
1882ம் ஆண்டு மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை பயன்படுத்த தொடங்கிய முதல் நாடாக பிரித்தானியா திகழ்கிறது.
அதே சமயம் சூரிய மற்றும் கடல் மாறுபாடுகள் உள்ளிட்ட காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக நிலக்கரி அனல் மின் நிலையங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ள முதல் ஜி7 நாடும் பிரித்தானியா ஆகும்.
1990ம் ஆண்டுகளில் பிரித்தானியாவின் 80% மின்சார தேவைகளை நிலக்கரி அனல் மின் நிலையங்கள் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |