டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை அகற்றம்: ஜனநாயக கட்சி மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் நிர்வாண சிலை அகற்றப்பட்டுள்ளது.
டிரம்பின் 43 அடி நிர்வாண சிலை
அமெரிக்காவின் வடக்கு லாஸ் வேகாஸ் அருகே முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாரான 78 வயது டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை வைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த நிர்வாண சிலையானது பரபரப்பான Love’s Travel நிறுத்தத்திற்கு அருகில் வைக்கப்பட்டு இருந்ததோடு, வழிபோக்கர்களின் சிறிய குழு சிலையுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
MAGA is big mad about the 43-foot-tall naked statue of Donald Trump named "Crooked and Obscene" that was placed near Las Vegas.
— Art Candee 🍿🥤 (@ArtCandee) September 30, 2024
🤣 pic.twitter.com/zyCGNSRC09
குடியரசு கட்சியினர் இது தொடர்பாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்பட ஜனநாயகவாதிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் அவர்கள் இத்தகைய அதிர்ச்சி தந்திரங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெவாடா கிராண்ட் ஓல்ட் பார்ட்டி இந்த சிலைக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதுடன் அவமானகரமானது என தெரிவித்துள்ளது, அத்துடன் அர்த்தமுள்ள விவாதங்களுக்கு பதிலாக இத்தகைய அதிர்ச்சியான செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |