இஸ்ரேலிய தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்: பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு
இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன், ஈரான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான போர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்ததை போலவே, இஸ்ரேல் மீது ஈரான் டஜன் கணக்கான ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
❗️BREAKING:
— NEXTA (@nexta_tv) October 1, 2024
CNN: Israeli security cabinet is in the emergency bunker, according to an Israeli source. pic.twitter.com/xNMtJo4ahU
இஸ்ரேலின் முக்கிய கடற்கரை நகரங்களை நோக்கி ஈரான் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் சில ஏவுகணைகளை தடுத்து இருந்தாலும், பல ஏவுகணைகள் இஸ்ரேலின் கடற்கரை நகரங்கள் மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து சென்றது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் பல தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Jerusalem Post: #Iran Launches Nearly 400 Missiles at #Israel pic.twitter.com/o2aVfiuwQu
— NEXTA (@nexta_tv) October 1, 2024
டெல் அவிவ் பகுதியில் பயங்கரவாத தாக்குதல்
இந்நிலையில் இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் அரங்கேறி இருப்பதாக இஸ்ரேலிய நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வெளியாகியுள்ள முதல் கட்ட தகவல்கள், டெல் அவிவ்-வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 10 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில் 2 நபர்கள் துப்பாக்கியுடன் கடை ஒன்றில் இருந்து வெளியேறும் புகைப்படமும், பொதுமக்கள் சிலர் துப்பாக்கி சூட்டிற்கு உள்ளாகி சாலையில் விழுந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
இஸ்ரேலிய பொலிஸார் வழங்கிய அறிக்கையில், டெல் அவிவ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்து இருப்பதுடன், 9 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என்றும், தாக்குதல்தாரி இருவரும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |