வெடித்த ஈரான்-இஸ்ரேல் மோதல்: அமெரிக்க ராணுவத்துக்கு ஜோ பைடன் முக்கிய உத்தரவு!
இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அமெரிக்க ராணுவத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டது மற்றும் ஹமாஸ் தலைவரை டெஹ்ரானில் படுகொலை செய்தது ஆகியவற்றுக்கு பதிலடியாக நேற்று இரவு இஸ்ரேலின் கடற்கரை நகரங்கள் மற்றும் மத்திய இஸ்ரேலிய பகுதியை குறிவைத்து டஜன் கணக்கான ஏவுகணைகளை ஈரான் ஏவியது.
❗️BREAKING:
— NEXTA (@nexta_tv) October 1, 2024
CNN: Israeli security cabinet is in the emergency bunker, according to an Israeli source. pic.twitter.com/xNMtJo4ahU
கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் ஏவிய பெரும்பாலான ஹைப்பர்சோனிக் ஃபத்தா ஏவுகணைகள் தங்களது இலக்குகளை வெற்றிகரமாக அடைந்ததாக புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா கண்டனம்
இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
❗️BREAKING:
— NEXTA (@nexta_tv) October 1, 2024
Sky News: Biden directed #US military to aid #Israel
Meanwhile, footage of an Israeli school destroyed by a missile attack is being published online. pic.twitter.com/iUJUl7rqpv
அத்துடன் இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ராக்கெட்டுகளை உடனடியாக சுட்டு வீழ்த்துமாறும் உத்தர விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஈரான் மிகப் பெரிய தவறிழைத்து விட்டதாகவும், இதற்கு பதிலடி நிச்சயமாக வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் அவசியம்
I condemn the broadening of the Middle East conflict with escalation after escalation.
— António Guterres (@antonioguterres) October 1, 2024
This must stop.
We absolutely need a ceasefire.
ஈரானின் ஏவுகணை தாக்குதலை அடுத்து, “மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து கொண்டு செல்வதை கண்டிக்கிறேன், இது நிறுத்தப்பட வேண்டும், நமக்கு முற்றிலுமான போர் நிறுத்தம் வேண்டும் என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு தொடர்பான ஒரு கூட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை கூட்ட திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |