பிரித்தானியாவின் முக்கிய நகரில் நடந்த துப்பாக்கி சூடு: 20 வயது நபருக்கு நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கொலை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு சிறிது முன்பு Edgbaston-இல் உள்ள Rotton Park Road-ல் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில் West Midlands காவல்துறை அழைக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் கார் ஒன்றில் 20 வயதுடைய ஒருவரை உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர்.
மேலும் 30 வயதுடைய நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சந்தேக நபர் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30 வயதுடைய நபர் ஒருவர் கொலை குற்றச்சாட்டின் பேரில் சனிக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு சிறிது முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் Nick Barnes பேசிய போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் புதிய தகவல்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |