விசாரணையில் பெண்ணின் ஆடையை களைந்த பிரித்தானிய பொலிஸார்: 16 மணி நேரம் நிர்வாணமாக சிறையில் அடைப்பு
பிரித்தானியாவில் விசாரணையின் போது ஆடைகளை களைந்து பொலிஸார் சோதனை செய்ததுடன், தன்னை 16 மணி நேரம் நிர்வாணமாக சிறையில் அடைத்து வைத்து இருந்ததாக பெண் ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதனை
பிரித்தானியாவின் பர்மிங்காமில் கடந்த ஆண்டு நவம்பரில் சினேட் ஃபோலே(37) என்ற பெண் பொலிஸாரால் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார், அத்துடன் சோதனை ஈடுபட்ட பொலிஸார்களை காட்டுமிராண்டிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பொலிஸார் விசாரணையின் போது நடத்தப்பட்ட துஷ்பிரயோகங்கள் குறித்த ஸ்கை நியூஸின் விசாரணையின் போது தொடர்பு கொண்ட பெண்களில் சினேட் ஃபோலே (Sinead Foley) ஒருவர்.
Sky News
சினேட் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றப்பத்திரிகைகள் எதுவும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார், ஆனால் விசாரணையின் மோசமான நினைவுகளை பெற்று திரும்பியுள்ளார்.
சினேட் பொருள் அணுகல் கோரிக்கையை பயன்படுத்தி, தான் விசாரணைக்காக அடைக்கப்பட்டு இருந்த சிறையின் சிசிடிவி காட்சிகளை பெற்றுள்ளார், அதில் பெண் பொலிஸ் அதிகாரிகளால் சினேட்டின் ஆடைகள் களையப்படுவதை பார்க்க முடிகிறது.
Sky News
இது தொடர்பாக அவர் பேசிய போது, வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன், இருப்பினும் அவர்கள் என் உடையை களைந்து நிர்வாணப்படுத்துகிறார்கள், இது முழுக்க முழுக்க மனிதாபிமானமற்ற செயல்.
என்னை அவர்கள் துஷ்பிரயோகம் செய்வதை என்னால் உணர முடிந்தது, அதை அவர்கள் அனுமதிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
ஸ்கை நியூஸ் முழு வீடியோக்களையும் பார்க்கவில்லை, ஆனால் அப்போது தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகவும், என்னை 16 மணி நேரம் நிர்வாணமாக சிறையில் அடைத்து வைத்து இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
Sky News
ஒரு கட்டத்தில் நிர்வாணமாக இருக்கும் போது ஆண் அதிகாரிகளும் சிறை கூண்டுக்குள் வந்ததாகவும், அப்போது தன்னை உள்ளே இழுத்துக் கொண்டதாகவும் சினேட் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் விளக்கம்
இந்நிலையில் எந்தவொரு அத்துமீறல்களும் அதிகாரிகளால் நிகழ்த்தப்படவில்லை என்று வெஸ்ட் மிட்லாண்ட் பொலிஸ் ஸ்கை நியூஸிடம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிட்டு பேசுகையில், சம்பந்தப்பட்ட பெண் காவலில் இருக்கும் போது பொலிஸ் அதிகாரிகள் அந்த பெண்ணின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பல நடவடிக்கைகளை அக்கறையுடன் எடுத்ததாக தெரிவித்துள்ளது.
Sky News
மருத்துவ கவனிப்புகளை மேற்கொள்வது அத்தியாவசியமான ஒன்று என்றும், அந்த பெண்ணின் பாதுகாப்பு மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு அவரது ஆடைகளை களைய வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவருக்கு போர்வையும் தண்ணீரும் வழங்கப்பட்டது, அவரது ஆக்ரோஷமான செய்கைகளால் அவருக்கு ஆடைகளை வழங்க அதிகாரிகளால் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |