பிரித்தானியாவில் பரபரப்பு! ஹார்விச் கடற்பகுதிக்கு அவசரமாக அனுப்பப்பட்ட எல்லை படையினர்.. இருவர் உயிருடன் மீட்பு!
இங்கிலாந்தில், எசெக்ஸின் ஹார்விச் கடற்பகுதிக்கு இன்று காலை ஒரு தீவிரமான சம்பவம் நடந்ததன் காரணமாக அவசர உதவிக்கா எல்லைப் படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெறிவித்துள்ளது.
ஆனால், நடந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இதுவரை கசிந்த தகவல்களிலின்படி, மீட்புக் குழுவினர், அவசர அவசரமாக அழைப்பைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது. மேலும், கடலோர காவல்படையினர் மீட்பு ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"முதற்கட்ட பதிலுக்குப் பிறகு மற்றும் நிலைமை தீர்க்கப்பட்டதும் மேலும் விவரங்கள் வழங்கப்படும்" என்று ஒரு அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பிரித்தானியாவிற்குள் நுழையும் நபர்கள் மற்றும் பொருட்களுக்கான குடியேற்றச் சோதனைகள் மற்றும் சுங்கக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில் எல்லைப் படை (Border Force) பணிபுரிகிறது.
ஆனால், இந்த அவசர நடவடிக்கை குடியேறியவர்கள் தொடர்புடையதா எந்தத் தகவலும் இல்லை என பிரித்தானிய செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
மேற்பட்ட விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்..