வாக்கெடுப்பிற்கு முன்னால்...நான் உங்களுக்காக வெற்றி பெறுவேன்: எம்.பிகள் மத்தியில் போரிஸ் பேச்சு!
நான் மீண்டும் உங்களுக்காக வெற்றி பெறுவேன் என கன்சர்வேடிவ் கட்சியின் டோரி எம்பிக்களுக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார்.
கொரோனா காலத்தில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டது தொடர்பாக எழுந்த பிரச்சனையில், பிரதமர் பதவி விலக வேண்டும் என அவரது சொந்த கன்சர்வேடிவ் கட்சியின் டோரி எம்பிக்களே போரிஸ் ஜான்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இன்று இரவு 18:00 முதல் 20:00 வரை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இவ்வாறு இன்று நடைப்பெறும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வியடைந்தால், அவர் பிரதமர் பதவியில் இருந்து இன்று விலக நேரிடும்.
இந்தநிலையில், வாக்கெடுப்பிற்கு முன்னதாக தனது சொந்த கட்சியின் டோரி எம்.பிக்களிடம் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நான் மீண்டும் உங்களை வெற்றிக்கு அழைத்து செல்வேன் என உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கன்சர்வேடிவ் கட்சியின் எதிர்காலம் குறித்து அர்த்தமற்ற சகோதரச் சண்டையில் இறங்குவதற்கு எதிராக அவர் எச்சரித்ததாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. மேலும் டோரி எம்.பிக்கள் நம்மை நாமே மாற்றிக் கொண்டு எதிரிகளை திருப்திப்படுத்த மறுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கூடுதல் செய்திகளுக்கு: புதிதாக 77 பேர் பாதிப்பு... பிரித்தானியாவில் அதிர்ச்சி தரும் குரங்கம்மை தொற்றாளர் எண்ணிக்கை
ஊடகங்களின் தாளத்திற்கு நடனமாடக்கூடாது என பிரித்தானிய பிரதமர் தெரிவித்த போது எம்.பிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கட்சியின் மூத்த வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.