இனி ஸ்வீடனை தாக்கினால்...பிரித்தானியா போரில் குதிக்கும்: புதிய ஒப்பந்தம் கையெழுத்து
ஸ்வீடனுடனான புதிய ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையை தொடர்ந்து, நார்டிக் நாடுகளான ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தன.
மேலும் அதற்கான வாக்கெடுப்புகள் மற்றும் தீர்மானங்கள் ஆகியவை அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இறுதியான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது.
The PM has signed new security deals with Sweden and Finland, pledging to support their armed forces if they come under attack.
— Sky News (@SkyNews) May 11, 2022
Read more here: https://t.co/UhcUdSXV6g pic.twitter.com/421NVDhC7K
இந்தநிலையில், ஸ்வீடன் நாட்டின் மீது ஏதேனும் ராணுவ தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் அந்த நாட்டை பாதுகாப்பதற்கான முக்கிய மற்றும் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் முலம் ஸ்வீடன் நாட்டின் மீது ஏதேனும் அத்துமீறிய ராணுவ தாக்குதல்கள் நடைப்பெற்றால் பிரித்தானிய ராணுவ படை பதில் தாக்குதல் மற்றும் ஆயுத உதவுகள் செய்து பாதுகாக்கும்.
பிரித்தானிய பிரதமரின் ஸ்விடன் சுற்றுபயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்த புதிய ராணுவ ஒப்பந்தத்தைப் போல், பின்லாந்து நாட்டுடனும் இத்தகைய ராணுவ ஒப்பந்தத்தில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அடுத்த சுற்றுபயணம் போது கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: பொதுமக்களிடம் உதவி கோரிய இலங்கை பொலிஸார்: வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு!
பிரித்தனியா மற்றும் ஸ்வீடன் நாடுகளின் இந்த புதிய ஒப்பந்தத்தை வலுவாக கண்டித்துள்ள ரஷ்யா, இது ஐரோப்பிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021