அறிமுக போட்டியில் பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் துயர மரணம்
பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் ஷெரிப் லாவல் தனது தொழில்முறை அறிமுகப் போட்டியில் அடிபட்டு உயிரிழந்தார்.
29 வயது குத்துச்சண்டை வீரர்
பிரித்தானியாவைச் சேர்ந்த 29 வயது குத்துச்சண்டை வீரர் ஷெரிப் லாவல் (Sherif Lawal). இவர் மிடில்வெயிட் போட்டியில், போர்த்துக்கல் வீரர் Malam Varelaவை எதிர்த்து விளையாடினார்.
இது ஷெரிப்பின் அறிமுக தொழில்முறைப் போட்டி ஆகும். இப்போட்டியின் நான்காவது சுற்றில் ஷெரிப் Knocked Down ஆனார்.
ஆனால் அவருக்கு பலத்த அடிபட்டதால், வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோ லீஷர் சென்டரில் உள்ள துணை மருத்துவர்கள், வளையத்தில் ஷெரிப்புக்கு சிகிச்சை அளித்தனர்.
துயர மரணம்
துரதிர்ஷ்டவசமாக ஷெரிப் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் முன்பே முன்பே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
செயின்ட் பான்க்ராஸ் கிளப்பில் CJ ஹுசைனால் பயிற்சி பெற்றவர் ஷெரிப் லாவல். அவரது இந்த மரணம் குத்துச்சண்டை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய குத்துச்சண்டை கட்டுப்பாட்டு வாரியம் ஷெரிப்பின் மரணம் துயரமானது என குறிப்பிட்டுள்ளது.
ஷெரிப் லாவல் தொழில்முறைக்கு மாறுவதற்கு முன்பு கடந்த ஆண்டு தேசிய Elite சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |