பள்ளி மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த 12 வயது சிறுவன்: பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள சோகம்
பள்ளி விளையாட்டு மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த 12 வயது சிறுவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த 12 வயது சிறுவன்
பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர்(Shropshire) பகுதியில் உள்ள டெல்ஃபோர்ட் லாங்லி பள்ளியில் (The Telford Langley School) உள்ள விளையாட்டு மைதானத்தில் ஜோசுவா லாயிட் என்ற 12 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்தான்.
இதையடுத்து பள்ளிக்கு உடனடியாக அவசர மருத்துவ குழு விரைவாக அழைக்கப்பட்ட போது மாணவன் மிகவும் தீவிரமான உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தான்.
gofundme
எனவே சிறுவன் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் பிரின்சஸ் ராயல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுவன் ஜோசுவா லாயிட் (Joshua Lloyd) உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
நண்பர்கள் இரங்கல்
மாணவர் ஜோசுவா லாயிட் உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு பள்ளி சார்பிலும் ஆசிரியர்கள் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகான மற்றும் அடக்கமான மாணவர் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மாணவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு சிறப்பு படையினர் மூலம் ஆறுதல் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
justgiving
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |