பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் மீது மோதி விட்டு தப்பியோடிய கார்: பொலிஸாரின் உடனடி நடவடிக்கை
பிரித்தானியாவில் கார் ஒன்று மோதியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த சிறுவன்
பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயரில் உள்ள M62-வில் கார் ஒன்று 12 வயது சிறுவன் மீது மோதி விட்டு வேகமாக தப்பிச் சென்றது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவன் வாகன பாதையை கடக்க முயன்ற போது கார் மோதி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Sky News
அத்துடன் விபத்து ஏற்படுத்திவிட்டு கார் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த பிறகு உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர்.
இது தொடர்பாக பேசிய தலைமை காவல் கண்காணிப்பாளர் சாரா ஜோன்ஸ், கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்து இருப்பது மிகவும் சோகமான நிகழ்வு, அதேசமயம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிறப்பு அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Sky News
36 வயதுடைய நபர் கைது
12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 36 வயதுடைய ஆண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கு பிறகு வாகன பாதை முற்றிலும் அடைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டது, ஆனால் பின்னர் சாலை அடைப்பு முழுவதுமாக திறக்கப்பட்டது.
SkyNews
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |