வெளிநாடு சென்ற பிரித்தானிய சிறுவன் தாயுடன் மாயம்! பொலிஸ் விசாரணை
துருக்கிக்கு சென்ற 4 வயது பிரித்தானிய சிறுவன் தாயுடன் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜார்ஜ் ஜாக் டெம்பர்லி-வெல்ஸ் எனும் நான்கு வயது சிறுவன், ஜூன் 29 அன்று அவனது தாய் ப்ரோகன் எலிசபெத் டெம்பர்லியுடன் டார்லிங்டனிலிருந்து அன்டலியா பகுதிக்கு பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.
அவர்களது பாதுகாப்பு குறித்து பொலிசார் தீவிர கவலை கொண்டுள்ளனர் மற்றும் அப்பகுதியில் உள்ள எவரும் தகவல் தெரிந்தால் முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்கள் அன்டலியா நகரத்தில் இருந்தபோது சிறுவனின் தந்தை ஸ்காட் நைகல் வெல்ஸுடன் (41) நேரத்தை செலவிட்டிருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 Picture: Durham Constabulary
Picture: Durham Constabulary
ஜார்ஜ் கடைசியாக அந்தால்யாவின் மெரினா பகுதியில் காணப்பட்டார், அங்கு எடுக்கப்பட்ட இரண்டு படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
Antalya நகரின் மிகப்பெரிய கடற்கரைக்கு அருகில் உள்ள பரபரப்பான பகுதியில் உள்ள ஒரு ஸ்டீக் உணவகத்தில் மூவரும் ஒன்றாக போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
தெற்கு கடலோர நகரமான Antalya பல விடுமுறை ஓய்வு விடுதிகளுக்கு அருகில் உள்ளது மற்றும் பிரித்தானிய சுற்றுலாவாசிகளிடையே பிரபலமானது.
 Picture: Durham Constabulary
Picture: Durham Constabulary
 ஜார்ஜ் சிவப்பு முடி, வெளிர் நிறம் மற்றும் கருமையான கண்கள் கொண்டவராக விவரிக்கப்படுகிறார், அதே சமயம் அவரது அம்மா நீண்ட, கருமையான முடி மற்றும் கருமையான கண்களுடன் மெலிதான உடலுடன் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        