அகதிகள் தொடர்பில் பிரித்தானியா கொண்டுவரும் புதிய விதி
புலம்பெயர்தல் தொடர்பில் புதிய விதி ஒன்றை பிரித்தானிய உள்துறை அமைச்சரான ஷபானா மஹ்மூத் அறிமுகம் செய்துள்ளார்.
அகதிகள் தொடர்பில் புதிய விதி
பிரித்தானிய உள்துறை அமைச்சரான ஷபானா மஹ்மூத், புகலிடக்கோரிக்கையாளர்களின் அகதி நிலை 30 மாதங்களுக்கு ஒருமுறை மறுசீராய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இன்று அமுலுக்கு வரும் புதிய புலம்பெயர்தல் விதிகளின்படி, பாதுகாப்பானவை என கருதப்படும் நாடுகளிலிருந்து வந்த அகதிகள் தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, அகதி நிலை வழங்கப்பட்டுள்ளவர்களில் அகதி நிலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசீராய்வு செய்யப்படும் என்பது தற்போதைய விதி.
ஆனால், இனி 30 மாதங்களுக்கு ஒருமுறை அகதி நிலையை மறுசீராய்வு செய்ய இருப்பதாக ஷபானா அறிவித்துள்ளார்.
முறைப்படி அகதி நிலை பெற்றவர்களுக்கு பிரித்தானியாவில் பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறியுள்ள ஷபானா, என்றாலும், அவர்களை ஈர்க்கும் சலுகைகளை குறைக்கவேண்டும் என்றும், அவர்களுடைய நாடு பாதுகாப்பானது என்ற நிலை உருவானதும் அவர்கள் திரும்பிச் செல்ல எதிர்பார்க்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விதி, புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுடன் ஒன்றிணைவதற்கு தடையாக இருக்கும் என்று கூறி, ஷபானாவின் இந்த அறிவிப்புக்கு புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |