உக்ரைனுக்கு முதல் முறை பிரித்தானியா அனுப்பியுள்ள ஆயுதம்: இருநாட்டுக்கும் இடையே அதிகரிக்கும் உறவு
ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் முதல் முறையாக உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா ஹெலிகாப்டர்களை வழங்கி உள்ளது.
கீவ்வில் பிரித்தானிய பிரதமர்
பிரித்தானியாவில் பல அரசியல் மாற்றங்களுக்கு பிறகு நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், உக்ரைனுக்கு வலுவான ஆதரவை தெரிவிக்கும் விதமாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி-யை தலைநகர் கீவ்வில் சமீபத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் சுதந்திரத்திற்காக போராடுவது என்றால் என்னவென்று பிரித்தானியாவிற்கு தெரியும் என்றும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனுடன் அனைத்து வழியிலும் பிரித்தானியா ஆறுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Britain knows what it means to fight for freedom.
— Rishi Sunak (@RishiSunak) November 19, 2022
We are with you all the way @ZelenskyyUa ????
Британія знає, що означає боротися за свободу.
Ми з вами до кінця @ZelenskyyUa ???? pic.twitter.com/HsL8s4Ibqa
பிரித்தானிய ஹெலிகாப்டர்கள்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிரான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா தங்களது ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனுக்கு மூன்று “சீ கிங்”( Sea King) ஹெலிகாப்டர்களை பிரித்தானியா அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Britain to send helicopters to Ukraine for the first time
— NEXTA (@nexta_tv) November 23, 2022
Britain will send #Ukraine three "Sea King" helicopters, said the head of the #British Ministry of Defense, Ben Wallace. The AFU will also receive 10,000 artillery shells. pic.twitter.com/1dKYysPUoK
அத்துடன் AFU 10,000 பீரங்கி குண்டுகளும் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.