உக்ரைனில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் தீவிர ஆலோசனை
பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக் உக்ரைன் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யை தலைநகர் கீவ்வில் சனிக்கிழமையான இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைன்-பிரித்தானியா நட்பு
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை அறிவித்ததில் இருந்து உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா இருந்து வருகிறது.
ரஷ்ய படைகள் உக்ரைனிய தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய உச்சக்கட்ட பதற்ற நிலையில் கூட, அப்போதைய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உக்ரைனுக்கான பிரித்தானியாவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.
Thank you, @RishiSunak. With friends like you by our side, we are confident in our victory. Both of our nations know what it means to stand up for freedom ???? https://t.co/9oFfswxp3K
— Володимир Зеленський (@ZelenskyyUa) November 19, 2022
மேலும் பல மில்லியன் டாலர்களை உக்ரைனுக்கு ஆதரவாக வழங்கியதுடன், ஆயிரக்கணக்கான ஆயுதங்களை உக்ரைனுக்கு பிரித்தானியா வாரி வழங்கியுள்ளது.
கீவ்வில் ரிஷி சுனக்
பிரித்தானியாவில் பல அரசியல் மாற்றங்களுக்கு பிறகு நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கும், பிரித்தானியாவின் வலிவான ஆதரவை தெரிவிக்கும் விதமாக உக்ரைன் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யை தலைநகர் கீவ்வில் சனிக்கிழமையான இன்று சந்தித்துள்ளார்.
அத்துடன் சுதந்திரத்திற்காக போராடுவது என்றால் என்னவென்று பிரித்தானியாவிற்கு தெரியும் என்றும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனுடன் அனைத்து வழியிலும் பிரித்தானியா ஆறுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
London will support Kyiv "until Ukraine wins," said British Prime Minister Rishi Sunak, who arrived in the Ukrainian capital and was met by Volodymyr Zelenskyy.
— NEXTA (@nexta_tv) November 19, 2022
"And after that, we will support you as you rebuild your great country," Sunak also said at a joint press conference. pic.twitter.com/YcWbbvTCJH
இந்த சந்திப்பு தொடர்பாக அவரது சமூக ஊடக பக்கத்தில் வீடியோ ஒன்றையும் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார், அதில் கீவ்வில் உள்ள அதிகாரப்பூர்வ சடங்கு இல்லத்தின் முன் உக்ரேனிய ஜனாதிபதியால் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வரவேற்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.