பிரித்தானியாவில் சகோதரனை கொலை செய்த இளைஞர்: நீதிமன்றம் விதித்துள்ள குறைந்தபட்ச தண்டனை
பிரித்தானியாவில் சகோதரனை கொன்ற குற்றத்தில் 20 வயதுடைய இளைஞருக்கு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சகோதரனை கொன்ற இளைஞர்
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் திகதி கார்மர்தன்ஷையரில் (Carmarthenshire) அம்மன்ஃபோர்டுக்கு பகுதிக்கு அருகிலுள்ள ட்ரெஃபோரிஸில் (Treforis) உள்ள வீட்டில் டைலர் லிண்ட்லி (Tyler Lindley) என்ற இளைஞர் அவரது 22வயது சகோதரர் கேமரூனை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.
இதையடுத்து வியாழக்கிழமை ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்றத்தில் அவருக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Sky News
அதில் சிம்லாவின்(Cimla) நீத்(Neath) பகுதியை சேர்ந்த லிண்ட்லிக்கு குறைந்தபட்சமாக 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேமரூனின் இழப்பு அவரது குடும்பத்தினர் மனநிலையில் பெரிய கவலையை ஏற்படுத்தி இருப்பதாக உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மனநிலை பாதிப்புகளே காரணம்
இந்நிலையில் சகோதரர் கேமரூனை கொலை செய்த சம்பவத்தில் டைலர் லிண்ட்லியின் மனநிலை முக்கிய பங்காற்றி இருப்பதாக பாரிஸ்டர் இக்னேஷியஸ் ஹியூஸ் கே.சி வாதிட்டார்.
இந்த வழக்கின் முத்த விசாரணை அதிகாரி ஜெய்ன் பட்லர் இளைஞர் கேமரூனுக்கு மிகச் சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.