ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கும் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா!
பிரத்தானியா, கனடா மற்றும் அவுஸ்திரேலிய தற்போது வரை ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மறுத்துள்ளன.
உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், 200-க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதர்களை வெளியேற்றியுள்ளன.
ஆனால் இதற்கு மாறாக, பிரத்தானியா, கனடா மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகள் ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மறுத்து வருகின்றன.
ரஷ்யா உடனான உறவு முறிந்துவிட்டது என வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.
ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவில்லை! பிரபல ஐரோப்பிய நாடு அதிரடி
அதேசமயம், ரஷ்ய பரஸ்பர நடவடிக்கையுடன் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது என கூறி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது முடிவு தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
கடந்த வாரத்தில் போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்லோவேனியா, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், லாட்வியா, கிரீஸ், போர்ச்சுகல், எஸ்டோனியா, அயர்லாந்து, ஸ்வீடன், செக் குடியரசு, ஆஸ்திரியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் ரஷ்ய தூதர்களை வெளியேற்றியுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் மேலும் 200 ரஷ்ய தூதர்களில் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.