பிரித்தானியா-கனடா இடையே புதிய செமிகண்டக்டர் ஆராய்ச்சி ஒப்பந்தம்
பிரித்தானிய அரசு, கனடாவுடன் இணைந்து செமிகண்டக்டர் ஆராய்ச்சி நெட்வொர்க் ஒன்றை தொடங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
இரு நாடுகளின் நிபுணர்களை ஒருங்கிணைத்து, சிறந்த, வேகமான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட சிப் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நெட்வொர்க் மூலம், மேம்பட்ட பொருட்கள், சிப் வடிவமைப்பு, பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி நடைபெறும்.
இதன் மூலம், சாதனங்கள் அதிக சக்தி வாய்ந்ததும், சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் இருக்கும்.

இந்த திட்டத்திற்கு 1.16 மில்லியன் பவுண்ட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
Southampton பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்டி ஜி. செல்லர்ஸ் தலைமையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு முன், 2025 தொடக்கத்தில் பிரித்தானியா-கனடா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், வேலை வாய்ப்புகள் உருவாக்குதல், பொருளாதார வளர்ச்சி, செமிகண்டக்டர் துறையில் முன்னணி நிலையைப் பெறுதல் ஆகியவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரித்தானியாவின் National Supercomputing Centre (Edinburgh) மற்றும் கனடாவின் Digital Research Alliance இணைந்து, AI மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன் மூலம், இரு நாடுகளும் பொது சேவைகளில் AI பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகின்றன.
பிரித்தானிய தொழில்நுட்ப அமைச்சர் இயான் முர்ரே, “பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், பொதுச் சேவைகள் நவீனமயமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
கனேடிய நிறுவனங்கள் 2023-ல் பிரித்தானியாவில் 30 பில்லியன் பவுண்டு முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் 1.65 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |