பிரித்தானியாவில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் 3 பேர் சடலமாக கண்டெடுப்பு: 60 வயது பெண் கைது!
பிரித்தானியாவில் பராமரிப்பு இல்லத்தில் 3 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் பரபரப்பு
டோர்செட்(Dorset) ஸ்வானேஜ்(Swanage) பகுதியில் உள்ள கெய்ன்ஸ்பரோ பராமரிப்பு இல்லத்தில்(Gainsborough care home) இன்று காலை 3 பேர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் கவுன்சிலர் பரிந்துரைத்த தகவலின் படி, இது கார்பன் மோனாக்சைடு காரணமாக இருக்கலாம், ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று சந்தேகம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவசர சேவைகள் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 48 பேரை பத்திரமாக மீட்டு அருகிலுள்ள ஆல் செயிண்ட் தேவாலயத்திற்கு அழைத்து சென்றனர்.
Please see below my statement following the incident in Swanage earlier today? pic.twitter.com/ssHgYuxTUM
— Lloyd Hatton MP ?? (@HattonLloyd) October 23, 2024
அதே நேரத்தில் எரிவாயு நிறுவனமான SGN சம்பவ இடமான பராமரிப்பு இல்லத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விரைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை கண்காணிப்பாளர் Heather Dixey வழங்கிய தகவலில், உயிரிழப்புக்கான காரணங்கள் தற்போது விளக்க முடியவில்லை. ஆனால் இவை கார்பன் மோனாக்சைடு கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியின் சமீபத்திய தகவலாக, 60 வயது பெண் ஒருவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.///
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |