பிரித்தானியாவில் நிர்வாண குளியல் அமர்வுக்கு தடை: புகார்களை தொடர்ந்து முக்கிய முடிவு
புகார்களை தொடர்ந்து ”டர்கிஷ் பாத்ஸ்” எனப்படும் விக்டோரியன் ஸ்பா(Victorian spa) வளாகத்தில் நிர்வாண குளியல் அமர்வுகளுக்கு பிரித்தானிய நகரம் தடை விதித்துள்ளது.
நீச்சலுடைகள் கட்டாயம்
ஹாரோகேட் டர்கிஷ் ஸ்பாவில் (Harrogate Turkish Baths) உள்ள விக்டோரியன் வசதி எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க குளியலறைகளில் ஆண்களும் பெண்களும் குளியல் அமர்வுகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த குளியலின் போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் குளியல் உடைகள் தேவைப்படுவது இல்லை.
madeinturkeytours.com
ஆனால் டர்கிஷ் பாத்ஸ் ஹாரோகேட்டில் அதிகரித்து வரும் தகாத நடத்தை பற்றிய புகார் தொடர்ந்து, பிரித்தானிய நகரம் ஒற்றை பாலின குளியல் அமர்வுகளுக்கு தடை விதித்துள்ளது.
இதன்மூலம் அனைத்து குளியல் அமர்வுகளிலும் நீச்சலுடைகள் இப்போது கட்டாயம் என்று செயல்பாட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
இது தொடர்பாக ஹாரோகேட் கவுன்சில் அறிக்கையில், "எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை நாங்கள் கவனிக்க வேண்டிய கடமை உள்ளது, மேலும் அனைத்து ஒற்றை பாலின அமர்வுகளும் பாதுகாப்பான சூழலில் செயல்பட, மறு அறிவிப்பு வரும் வரை நீச்சல் உடைகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
ஹாரோகேட் அதன் டர்கிஷ் குளியல் பகுதிகளுக்கு 120 ஆண்டுகளாக வெகு தொலைவில் உள்ள மக்களை அதிகமாக ஈர்த்து வருகிறது.
இந்த குளியல் அமர்வை பார்வையிட 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாக பின்பற்றப்பட்டு வருகிறது.
madeinturkeytours.com

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.