பிரித்தானியாவில் உயர்த்தப்படும் மின்சார கார் சார்ஜிங் கட்டணம்
ஏப்ரல் மாதத்திலிருந்து பிரித்தானியாவில் மின்சார கார்கள் சார்ஜ் செய்யும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
பிரித்தானியாவில் ஏப்ரல் 1 முதல் மின்சார வாகனங்களை (EV) முழுமையாக சார்ஜ் செய்யும் செலவு 16 பவுண்டுகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, EV ஓட்டுநர்களின் மின்சார கட்டணங்கள் மாதத்திற்கு கோடிக்கணக்கான பணியினை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Office of Gas and Electricity Markets (Ofgem), மின்சார மற்றும் எரிவாயு கட்டணங்களை 6.4% உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Carmoola நிறுவனத்தின் கணிப்பின் படி, தற்போது 60kWh பேட்டரி கொண்ட மின்சார காரை சார்ஜ் செய்ய £14.91 ஆக உள்ளது. ஆனால், ஏப்ரல் முதல் இது £16.21 ஆக உயரும்.
பிரித்தானியா முழுவதும் 1.2 மில்லியன் EV கார்கள் இருப்பதால், வீட்டில் சார்ஜ் செய்யும் செலவு மாதத்திற்கு £35 மில்லியன் ஆகும். இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது £2.84 மில்லியன் அதிகம்.
Plug-in hybrid வாகன ஓட்டுநர்களுக்கு சார்ஜிங் செலவு 3.48 பவுண்டுகளில் இருந்து 3.78 பவுண்டுகள் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார வாகனங்களின் செலவு அதிகரிப்பு EV வாங்க நினைக்கும் பலரையும் தயங்க செய்யும் என்றும், ஏற்கனவே மூன்றில் ஒரு பகுதி மக்கள் மின்சார வாகனங்களை தேர்வு செய்யாமல் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளதாக, Carmoola நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO Aidan Rushby கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
cost of ev charging in UK, UK Electric Car charging cost