பிரித்தானியாவை வாட்டும் வாழ்க்கை செலவு நெருக்கடி: உணவின்றி தவிக்கும் 10 மில்லியன் மக்கள்!
வாழ்க்கை செலவு நெருக்கடியால் பிரித்தானியாவில் ஏழு நபர்களில் ஒருவர் உணவு உட்கொள்வதை பொரும்பான்மையான நேரங்களில் தவிர்க்க தொடங்கி இருப்பதாக ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் கடுமையான வாழ்க்கை செலவு பிரச்சனைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்தநிலையில், YouGov நிறுவனம் சுமார் 10,674 பிரித்தானியர்களிடம் கடந்த ஏப்ரல் 22 முதல் 29 வரை நடத்திய ஆய்வில், கிட்டத்தட்ட 7.3 மில்லியன் பெரியவர்கள் மற்றும் 2.6 மில்லியன் குழந்தைகள் வசிகின்ற குடும்பங்கள் உணவு இல்லாத நிலைக்கும், உணவு கிடைக்காத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், 14 சதவிகித பிரித்தானிய மக்கள் வாழ்க்கை செலவு பிரச்சனை காரணமாக குறைவான உணவையோ அல்லது உணவை தவிர்க்கவோ செய்வதாக தெரியவந்துள்ளது.
மேலும் 4.6 சதவிகித மக்கள் ஒருநாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதிகரித்து வரும் இந்த பணவீக்கத்தின் பாதிப்பானது, முந்தைய 30 ஆண்டுகளில் 7 சதவிகிதம் வரை அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானியாவின் உணவு அறக்கட்டளை தெரிவித்துள்ள தகவலில், இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 57 சதவிகித பிரித்தானியர்கள் தங்களுகான உணவு பொருளை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, உணவு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் அன்னா டெய்லர் தெரிவித்த கருத்தில், பிரித்தானியாவில் அதிகரித்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையால் பொதுமக்கள் உணவுகாக உணவு அறக்கட்டளை அழைப்பதாகவும், ஆனால் அதிகரித்து வரும் ஏரிப்பொருள் விலையேற்றத்தால் சமைத்து உண்ணும் உணவை தவிர்த்து, சமைக்காமல் உண்ணும் உணவு பொருள்களையே கேட்பதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: தைவானில் பயங்கர நிலநடுக்கம்: ராட்சத கடல் அலைகள் தோன்றலாம் என ஜப்பான் எச்சரிக்கை!
மேலும் பிரித்தானியாவில் எழுந்துள்ள இந்த பணவீக்க பிரச்சனை விரைவில் உணவு பிரச்சனையாக மாறும் என்றும் இதனை உணவு அறக்கட்டளையால் மட்டும் தீர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.