தைவானில் பயங்கர நிலநடுக்கம்: ராட்சத கடல் அலைகள் தோன்றலாம் என ஜப்பான் எச்சரிக்கை!
தைவான் தலைநகர் தைபேயில் 6.1 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
தைவானின் கிழக்கு கடற்கரையில் இருந்து 27.5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் என்ற அளவிலான திடீர் நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதை தொடர்ந்து பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர்.
இதுகுறித்து, வானிலை ஆய்வு அலுவலகம் வெளியிட்ட தகவலில், இந்த நிலநடுக்கமானது ஹுவாலியன் கவுண்டி மற்றும் தெற்கு ஜப்பானிய தீவான யோனகுனியின் கடற்கரைக்கு மத்தியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இரண்டு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் தைவான் தீவானது அமைந்து இருப்பதால், இந்த நிலநடுக்கத்தை தீவு முழுவதம் உணர முடிந்தாகவும் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலநடுக்கமானது கடல் மட்டத்தில் இருந்து 20 கி.மீ துரத்தில் நடைபெற்று இருப்பதால், கடலில் பிரமாண்டமான கடல் அலைகள் தோன்றலாம் எனவும், ஆனால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிலிப்பைன்ஸ் தேர்தல்: ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
இதுவரை வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, இருப்பினும் சேதம் குறித்த எந்தவொரு முழுமையான தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடகத்தில் தீவில் 6.2 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடதக்கது.