பிலிப்பைன்ஸ் தேர்தல்: ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுதேர்தல் திங்கள்கிழமையான இன்று பிலிப்பைன்ஸில் மிகவும் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது.
இந்த தேர்தலில் பிலிப்பைன்ஸில் முன்னாள் சர்வாதிகாரியான ஃபெர்டினாண்ட் மகன் மார்கோஸ் மற்றும் தற்போதைய துணைப் ஜனாதிபதியான லெனி ராப்ரெட்டோ ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்.
மேலும் இந்த தேர்தலில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தலைவர், செனட் உறுப்பினர்கள், மேயர்கள் என மொத்தம் 18,000 பதவிகளை தேர்ந்தேடுக்கும் தேர்தல் வாக்குபதிவுகள் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தேர்தல் களத்தை பொருத்தவரை மிகவும் கலவரம் கொண்டதாகவே பொதுவாக காணப்படும் நிலையில், இதுவரை நடைபெற்று வரும் வாக்குபதிவில் எந்தவொரு கலவரங்களும் எற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 65 மில்லியன் பொதுமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 60,000 பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுவரை வந்ததுள்ள தேர்தலுக்கு முந்தைய கறுத்துகணிப்புகளில் பிலிப்பைன்ஸில் முன்னாள் சர்வாதிகாரியான ஃபெர்டினாண்ட் மகன் மார்கோஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவின் வெற்றி விழா கொண்டாட்டம்: தூதர்கள் மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றிய போலந்து மக்கள்!
மார்கோஸின் இந்த வெற்றியின் முலம் 38 வருடங்களுக்கு பிறகு சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் குடும்பம் ஆட்சி பொறுப்பிற்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.