புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் மேலும் ஒரு நாட்டுடன் ஒப்பந்தம்
Britain has struck a deal with Belgium to stop people smugglers: ஆட்கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், பெல்ஜியம் நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது பிரித்தானியா.
சட்டவிரோத புலம்பெயர்வோர் சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது இன்னமும் பிரித்தானியாவுக்கு சவாலாகவே உள்ளது.

அதற்குக் காரணம், இந்த சட்டவிரோத புலம்பெயர்வோர் வெறுமனே பிரான்சை மட்டும் பின்னணியாகக் கொண்டு இயங்கவில்லை.
அவர்கள் பல நாடுகளிலிருந்து இயங்குகிறார்கள் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுண்டு. அதை நிரூபிப்பதுபோல, சமீபத்தில், ஆட்கடத்தல்காரர்கள், பெல்ஜியம் நாட்டிலிருந்து புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம்
ஆக, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள, ஆட்கடத்தல்காரர்கள் பெல்ஜியம் நாட்டுக் கடற்கரைகளிலிருந்து படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புகிறார்கள்.
ஆகவே, பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த, பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது பிரித்தானியா.

ஆக, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, இனி பிரான்ஸ், பிரித்தானிய பொலிசாருடன், பெல்ஜியம் பொலிசாரும் இணைந்துகொள்ள இருக்கிறார்கள்.
அத்துடன், பிரித்தானியாவும் பெல்ஜியமும் உளவுத்துறை தகவல்களையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.
விடயம் என்னவென்றால், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், 32 முறை, பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிப்பதை பெல்ஜியம் பொலிசார் கவனித்துள்ளார்கள்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், வெறும் இரண்டு முறை மட்டுமே இத்தகைய முயற்சிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிசார் நடவடிக்கைகளைத் துவக்கியதால், ஆட்கடத்தல்காரர்கள், பெல்ஜியம் நாட்டுக் கடற்கரைகளிலிருந்து படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |