ஏவுகணைத் தாக்குதல்களுக்கு நடுவில் உக்ரைன் சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்
ரஷ்யா, உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், உக்ரைன் சென்றுள்ளார் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்.
ரஷ்யா, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலர், உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
உக்ரைன் சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்
ரஷ்யா, 24 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள், 4 ஹைப்பர்சோனிக் வகை ஆயுதங்கள் மற்றும் 100க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

ஆனால், அவை எதையும் உக்ரைன் தடுத்து நிறுத்தவில்லை! காரணம், அவற்றைத் தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உக்ரைனில் தட்டுப்பாடு நிலவுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலராக பதவியேற்றுள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரிடம் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உதவி கோரிய நிலையில், உக்ரைனுக்குத் தேவையான ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் சில பிரித்தானியாவிடம் இல்லை.
ஆகவே, தங்களிடம் அந்த பாதுகாப்புக் கருவிகள் இல்லையென்றாலும், அவை யாரிடம் உள்ளதோ அவர்களிடம் தான் உதவி கோர உள்ளதாக ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசும்போது புடின் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப, தங்களுக்கு ரஷ்ய மக்களுடன் பிரச்சினை இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்வதாகவும், புடினுடன் மட்டுமே தங்களுக்குப் பிரச்சினை என்றும் கூறியுள்ளார் ஸ்ட்ரீட்டிங்.
அத்துடன், தாங்கள் ரஷ்யாவுடன் போரிட எப்போதுமே விரும்பியதில்லை என்றும், இப்போதும் விரும்பவில்லை என்றும் கூறியுள்ள ஸ்ட்ரீட்டிங், தாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக மட்டுமே நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |