நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள்: ரஷ்யாவை எச்சரித்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர்
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஹீலி, எந்தவொரு போர்நிறுத்த பேச்சுவார்த்தையும் உக்ரைனை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என மீண்டும் உறுதிப்படுத்தினார்.
போரை நிறுத்த முயலும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன், ரஷ்யா இடையிலான போரை நிறுத்த முயன்று வருகிறார்.
அவர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் இதுதொடர்பாக பேசியதாக செய்தி வெளியானது.
அவ்வாறு அவர்கள் பேசியிருந்தால், இருதரப்பு பேச்சுவார்த்தைகளாக மாறக்கூடும் என கவலை தெரிவித்த ஜெலென்ஸ்கி, புடின் கூறுவதை நம்ப வேண்டாம் என உலகத் தலைவர்களை எச்சரித்தார்.
உக்ரைன் இல்லாமல் எந்த தீர்வும் இருக்க முடியாது
இந்த நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெலென்ஸ்கி நாங்கள் மீண்டும் கூறுவதையே கூறுகிறார். உக்ரைன் இல்லாமல் உக்ரைன் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்காது. உக்ரைன் ஈடுபட வேண்டும். இதுதான் பொதுவான நடைமுறை. செயல்முறையின் மையத்தில் உக்ரைன் இல்லாமல் எந்த தீர்வும் இருக்க முடியாது, நீடித்த அமைதி அல்லது பாதுகாப்பும் இருக்க முடியாது" என்றார்.
மேலும் பேசிய ஹீலி, "நான் அவர்களிடம் (ரஷ்யா) கூறுவேன்; நீங்கள் பலத்தின் நிலையில் இல்லை, பலவீனமாக நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நாளைக்கு 1,500 துருப்புகளை இழக்கிறீர்கள். உங்கள் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை நீங்கள் போருக்காக செலவிடுகிறீர்கள்.
உங்கள் பொருளாதாரம் சிதைந்துள்ளது. மேலும், ஐரோப்பாவின் பாதுகாப்பின் முன்னணி வரிசை உக்ரைனில் தொடங்குகிறது என்பதை அவர்கள் அங்கீகரிப்பதால், உக்ரைனுடன் இருக்க தீர்மானித்த பல நட்பு நாடுகள் உங்களிடம் உள்ளன" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |