பிரித்தானியாவில் தாய் மற்றும் 22 வயது மகனுக்கு நேர்ந்த பரிதாபம்: கருப்பு BMWக்கு பொலிஸார் வலைவீச்சு
பிரித்தானியாவில் கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்-மகன் உயிரிழப்பு
பிரித்தானியாவில் சனிக்கிழமை காலை 10.20 மணியளவில் B5057 செஸ்டர்ஃபீல்ட்(Chesterfield) சாலையில் கருப்பு BMW ஒன்று பாதிக்கப்பட்டவரின் Fiat 500 கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது.
இதில் 59 வயது பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
Google Photos
அத்துடன் அவரது 22 வயது மகன் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக பின்னர் டெர்பிஷயர் பொலிஸார் அறிவித்தனர்.
பொலிஸார் வலைவீச்சு
இந்நிலையில் 40 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து தொடர்ந்து பொலிஸ் விசாரணையில் வைத்துள்ளனர்.
ஆனால் விபத்து ஏற்படுத்தி விட்டு சம்பவ இடத்தில் இருந்து சென்ற கருப்பு BMW-வின் சாரதி இன்னும் கைது செய்யப்படவில்லை.
கருப்பு BMW-வின் சாரதியை பிடிக்க டெர்பிஷயர் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விவரம் தெரிந்தவர்கள் முன்வந்து தகவல் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |