பிரித்தானியாவில் டீசல் விலை முதன்முறையாக 2 பவுண்டுகள் அதிகரிப்பு
UK diesel price hits £2 a litre for first time: பிரித்தானியாவில் முதன்முறையாக டீசல் விலை லிற்றருக்கு 2 பவுண்டுகள் அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவின் Royal Automobile Club (RAC) என்னும் அமைப்பு, பிரித்தானியாவில் முதன்முறையாக டீசல் விலை லிற்றருக்கு 2 பவுண்டுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டீசல் விலை 2 பவுண்டுகள் அதிகரிப்பு
இந்த RAC அமைப்பு, பிரித்தானியாவில், வாகன காப்பீடு, வாகனப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய விடயங்களுக்கு பொறுப்பான அமைப்பாகும்.

பிரித்தானியாவில், டீசல், இப்போது லிற்றர் ஒன்றிற்கு 200.01பவுண்டுகளுக்கு விற்கப்படுகிறது.
அதே நேரத்தில், பெட்ரோல் விலையும் உயர்ந்துவருவதாகவும் RAC தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை தற்போது 174.71 பவுண்டுகளாக உள்ளது.
எரிபொருள் விலைகள் இப்போதைக்கு குறைவது போல் தெரியவில்லை என்று கூறியுள்ள RAC, அதனால் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது என்கிறது.
இதற்கிடையில், டீசல் விலை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், டீசல் தட்டுப்பாடு குறித்த கவலை வேண்டாம் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.