பிரித்தானியாவில் டிஜிட்டல் அடையாள அட்டை இன்று முதல் அறிமுகம்: விரிவான விளக்கம்
பிரித்தானியாவில் இன்று முதல் முன்னாள் படைவீரர்கள் டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் அடையாள அட்டை
ஆனால், வேலை செய்யும் உரிமை தொடர்பான சர்ச்சைக்குரிய கட்டாய சோதனைகளிலிருந்து இந்தத் திட்டம் வேறுபட்டது என்றே கூறப்படுகிறது.
2027 ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவில் உள்ள அனைத்து பெரியவர்களும் டிஜிட்டல் அடையாள அட்டையைப் பெற வேண்டும் என்ற லேபர் கட்சியின் பிரதான திட்டத்தின் ஒரு பகுதி என்றே கூறுகின்றனர்.
டிஜிட்டல் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறும் முன்னாள் படைவீரர்கள், அவர்கள் முன்னாள் ராணுவ வீரர் என்பதை உறுதி செய்து, தொடர்புடைய சேவைகளை அணுக இந்த அடையாள அட்டை அவர்களுக்கு உதவும்.
அமைச்சர் இயன் முர்ரே தெரிவிக்கையில், முன்னாள் படைவீரர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் இந்த டிஜிட்டல் அடையாள அட்டையானது, மொத்த பிரித்தானிய மக்களுக்கும்மான டிஜிட்டல் அடையாள அட்டை கொள்கையின் முன்னோட்டமாகும் என்றார்.
கிட்டத்தட்ட 300,000 முன்னாள் வீரர்களுக்கு டிஜிட்டல் அட்டை வழங்குவதுடன், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அரசு கண்காணிக்க முடியும் என்றார். மட்டுமின்றி, ஏற்கனவே அமுலில் இருக்கும் அடையாள அட்டையும் தொடர்ந்து விநியோகிக்கப்படும்.
உதவிகளைப் பெற
தற்போது அமுலில் இருக்கும் அடையாள அட்டையானது, இராணுவ சேவையில் இருந்த காலத்தை உறுதி செய்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து பொருத்தமான உதவிகளைப் பெற அனுமதிக்கிறது. தற்போது அமுலுக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை இதை எளிதாக்கும் என்றே நம்பப்படுகிறது.
இராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பத்திரமாக இருக்கும். மேலும், தரவுத்தளத்துடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்க, ஒவ்வொரு முன்னாள் வீரரும் தங்களது அலைபேசியில் உள்ள அட்டையில் உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே லேபர் அரசாங்கத்தின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்கு எதிராக 2.8 மில்லியன் மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |