பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் சாரதிகளுக்கு உருவாகியுள்ள புதிய சிக்கல்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தால் சாரதிகளுக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
சாரதிகளுக்கு உருவாகியுள்ள புதிய சிக்கல்
பிரெக்சிட்டைத் தொடர்ந்து, பிரான்ஸ் முதலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சிறு சாலை விதி மீறல்களில் ஈடுபடும் பிரித்தானிய சாரதிகள் அபராதம் விதிக்கப்படுவதிலிருந்து தப்பிவந்தார்கள்.
அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், பிரான்ஸ் முதலான நாடுகளில் பிரித்தானியர்கள் சாலை விதி மீறல்களில் ஈடுபடும்போது, அது தொடர்பான ஆவணங்களை பிரித்தானியாவுக்கு அனுப்பமுடியாத நிலை உருவாகியிருந்தது.
ஆனால், தற்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தால், விதி மீறல்களில் ஈடுபடும் பிரித்தானிய சாரதிகளுக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
அதேபோல, பிரித்தானியாவில் சாலை விதி மீறல்களில் ஈடுபடும் பிரான்ஸ் முதலான ஐரோப்பிய நாடுகளின் சாரதிகளும் அதே சிக்கலை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
பிரெக்சிட்டுக்கு முன், Cross Border Enforcement directive எனும் விதியின்கீழ், ஐரோப்பாவில் விதிகளை மீறும் பிரித்தானிய சாரதிகள் மீது, அவர்களுடைய கார் ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் பதிவு செய்யப்பட்டதாக இருக்கும் பட்சத்தில், ஐரோப்பிய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கமுடியும் என்ற நிலை இருந்தது.
பிரெக்சிட்டால் அந்த நிலை மாறியிருந்தது. அதாவது, சிறு விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகள் அபராதம் விதிக்கப்படுவதிலிருந்து தப்பிவந்தார்கள்.
தற்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தால், முன்போலவே ஐரோப்பிய அதிகாரிகளால் பிரித்தானிய சாரதிகள் மீதும், பிரித்தானிய அதிகாரிகளால் ஐரோப்பிய சாரதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியும் என்ற நிலை உருவாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |