பிரித்தானியாவின் e-visa முறையில் தாமதம்., காலாவதியான ஆவணங்களை பயன்படுத்த அவகாசம் நீட்டிப்பு
பிரித்தானிய அரசு e-visa மாற்றத்தில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய அரசு e-visa முறைக்கு மாறிவரும் நிலையில், இதில் ஏற்படும் தாமதம் காரணமாக, காலாவதியான பயண ஆவணங்களை சர்வதேச பயணங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் கால அவகாசத்தை மார்ச் 2025 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை விசா வைத்திருப்பவர்கள் முழுமையான ஆன்லைன் eVisa முறைக்கு (fully online eVisa system) மாறும்போது அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் 2024 டிசம்பர் மாத இறுதிக்குள் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் பர்மிட் (BRP), விசா வின்யெட் ஸ்டிக்கர் மற்றும் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் கார்டு (BRC) போன்ற ஆவணங்களை e-விசாவாக மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3.1 மில்லியனிற்கும் மேற்பட்டோர் e-விசா மாற்றத்தை முடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இன்னும் பலர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நேரக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார்கள்.
e-விசா மாற்றத்தை எளிதாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக குடியேற்ற மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் சீமா மால்ஹோத்ரா கூறியுள்ளார்.
2024 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் ஆவணங்கள், 2025 மார்ச் 31 வரை சர்வதேச பயணங்களுக்கு செல்லுபடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் உறுதிப்படுத்தினார்.
e-விசாவுக்கு மாறுவது இலவசமானது என்றும், இது பாதுகாப்பானதும் எளிமையானதுமான பயண அனுபவத்தை வழங்கும் என்றும், விசா கோரி தேவையற்ற ஆவணங்களை இழப்பது அல்லது மாற்றம் செய்யப்படும் அபாயம் இல்லாததையும் பிரித்தானிய அரசு வலியுறுத்துகிறது.
2025-ஆம் ஆண்டிற்குள் பிரித்தானியா குடியேற்ற முறையை முழுமையாக டிஜிட்டல் சேவைக்கு மாற்றுவதற்கான திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK e-visa transfer, UK Introduces grace period for expired travel documents amid e-visa transition delays, Uk online eVisa system