லண்டனின் -4C வெப்பநிலையில் சாலையில் வீசப்பட்ட புதிதாய் பிறந்த குழந்தை: பின்னர் நடந்தது என்ன?
பிரித்தானியாவில் பிறந்த குழந்தை ஒன்று ஷாப்பிங் பைப்பில் சுற்றி சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் வீசப்பட்ட பிறந்த குழந்தை
பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் வீசப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட அந்த குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும், கருப்பு அல்லது கலப்பினத்தில் பிறந்த அந்த பெண் குழந்தைக்கு தற்காலிகமாக எல்சா(Elsa) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு 9.13 மணியளவில் நியூஹாம் ஜங்ஷன் பகுதியில் வளர்ப்பு நாயை நடைபயிற்சி கூட்டிச் செல்லும் நபர் ஒருவர் சாலையில் வீசப்பட்ட குழந்தையின் அழுகுரல் கேட்டு அதை பத்திரமாக மீட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸார் மற்றும் அவசர அழைப்புக்கு தகவல் கொடுத்த அவர், மருத்துவ குழு வரும் வரை குழந்தையை கம்பளியால் சுற்றி பாதுகாப்பாக பராமரித்து கொண்டு இருந்துள்ளார்.
-4C வெப்பநிலை
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் அவசர அழைப்பினர் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே சமயம் குழந்தை எவ்வளவு நேரமாக சாலையில் இருந்து என்று துல்லியமாக தெரியவில்லை என்றும், ஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தை கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிழமை லண்டனை சுற்றியுள்ள பகுதியில் வெப்பநிலை -4Cக்கு கீழ் இருந்ததாக மெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை உடனடியாக தேவைப்படலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
shopping bag, east London, newborn baby, little girl, Elsa, black or mixed-race child, Greenway,Metropolitan Police, paramedics, High Street South, Newham,